Friday, 19 August 2011
TNTJ விற்கு களங்கம் ஏற்ப்படுத்திய போலி தவ்ஹித்வாதிகள்
பதட்டமான நிலையில் பள்ளி முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது
ஆயிரம் மாதங்களுக்கு இணையான ஒரு மாதம் ரமலான் மாதம். இம்மாதம் அருட்கொடை நிறைந்த மாதம். பல்வேறு அமைப்புகள், தன்னார்வு நிறுவனங்கள், மதரஸாக்கள் தங்களின் பொருளாதார தேவைகளை. மக்களிடம் எடுத்துரைக்க பல்வேறு பள்ளிவாசலில் ஜும்ஆ பயானை கேட்டு வாங்கி தங்களது பணிகளை எடுத்துரைக்கிறார்கள்.
பள்ளிவாசலின் வெளித்தோற்றம்
இவ்வாறு பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியின் அருகிலுள்ள பிரபலமான பள்ளிவாசல் மிலிட்டரி லைன் பள்ளிவாசல். இப்பள்ளியில் தாருல் ஹிக்மா என்று அழைக்கக்கூடிய, புதிதாக இஸ்லாத்தை ஏற்ற மக்களுக்கு அடிப்படை இஸ்லாமிய கல்வியைபயிற்றுவிக்கும் அறிவகம் மதரஸா சார்பில் 12/08/2011 அன்று ஜும்ஆ பயான் நடத்தினர்.
பிரச்சினை நடந்த இடம்
இந்த ஜும்ஆ பயானில் தாருல் ஹிக்மா பற்றிய தகவல்களையும் அதன் பொருளாதார தேவைகளையும் சிறப்பாக எடுத்து வைத்தனர். ஜும்ஆ நிறைவடைந்தவுடன் அறிவகம் மதரஸாவிற்கு தேவையான பொருளாரதார உதவியை பெற்றனர் அந்த மதரசாவின் ஆலிம்கள்.இதனை அறிந்த TNTJ வின் பாளை நகரத் தலைவர் செய்யது என்பவர் தங்களது அமைப்பிற்கும் இதுபோல ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்று கண்ணியமான முறையில் கேட்காமல், மிலிட்டரி லைன் பள்ளி நிர்வாகிகளை பள்ளியினுள் புகுந்து தவறான சொற்களால் பேசினர் அந்த தவ்ஹித்வாதிகள்.
இதனால் அனுமதி தர மறுத்த அந்த பள்ளி நிர்வாகிகளின் வாகனங்களை சேதப்படுத்தியது மட்டுமின்றி, அந்த பள்ளியின் நிர்வாகிகளை கொன்றுவிடுவதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அறிந்ததும் PFI , TMMK மற்றும் MMMK உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பள்ளியின் முன் அராஜகம் பண்ணிய இந்த TNTJ வின் மீது காவல்துறையிடம் புகார் அளித்தனர். TNTJ மீது தக்க நடவடிக்கை எடுப்போம் என காவல்துறையினர் உறுதியளித்தனர்.
மறுபடியும் அடுத்த நாள் வந்து எப்படி போலீசிடம் புகார் அளிக்கலாம் என்று வயதான பள்ளி நிர்வாகிகளை தாக்கி உள்ளனர்.அவர்கள் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
தவ்ஹித் எனும் போர்வையில் உள்ள ஒரு சில போலி தவ்ஹித்வாதிகளால் ஒட்டுமொத்த TNTJ விற்கு களங்கம் ஏற்ப்படுகின்றது. மேலும் இப்படிப்பட்ட களங்கத்தை ஏற்ப்படுத்தும் இந்த கயவர்கள் மீது நடைவடிக்கை TNTJ வின் மேல்மட்ட குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)


allahvai bayanthu kollungal ,unmaiyai solgiren endru poigalai alli podathirgal allah ungalai kanganithu kondu irukkiran "yaar allahvaiyum iruthi thuthar mohamed(sal) avargalai kattupadu kindraro avarthan unmaiyana muslim "
ReplyDelete