ஆந்திர மாநிலத்தில் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தள்ளுவண்டிகள் விநியோகிக்கப்பட்டது
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமுதாய மேம்பாட்டுத் துறை பல்வேறு சமுதாய நலப்பணிகளை தேசிய அளவில் செய்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் பாப்புலர் பிராண்டின் ஆந்திர யூனிட் சார்பாக ஏழை காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுக்கு அவர்களின் சுய தொழிலை ஊக்குவிக்கும் விதத்தில் தள்ளுவண்டிகள் இலவசமாக நெல்லூர் குர்நூல் எம்மிக்நூர் அடோனி நந்தியால் ஆகிய இடங்களில் வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி குர்நூல் அலுவலக வளாகத்தில் 27-06-2011 அன்று நடைபெற்றது .
பாப்புலர் ப்ரண்ட் தேசிய செயலாளர் யாசிர் ஹசன் மாநில தலைவர் முஹமத் ஆரிப் அஹ்மத் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் இன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்
ஆந்திர மாநில யூனிட் தள்ளு வண்டிகள் விநியோகித்ததை சிலாகித்து பேசிய யாசிர் ஹசன் மனிதாபிமான சேவைகளில் பாப்புலர் ப்ரண்ட் என்றுமே முன்னணியில் நின்று செயல்பட்டு வருவதை ஆதாரங்களுடன் விளக்கிக் கூறினார்
Bandi distribution camp
பாப்புலர் பிராண்டின் மாநில தலைவர் பேசும்போது வரும் ஒரு ஆண்டிற்குள் கிராமப்புறங்களில் இலவச கிளினிக்கள் நிறுவவும் மருத்துவ முகாம்கள் நடத்தவும் இரத்த தான குழுக்களை உருவாக்கவும் ஏழை குடும்பங்களுக்கு வட்டியில்லா சிறு கடனுதவி திட்டத்தை செயல்படுத்தவும் கல்வி வழிகாட்டி மையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


No comments:
Post a Comment