ஆர்.எஸ்.எஸின் வன்முறை வெறியாட்டங்கள்; அமைப்புக்குள்ளேயே கொலைகள்
திடுக்கிடும் தகவல்கள்
புதுடில்லி, ஜன.11 இந்தியாவில் பல இடங் களில் நடந்த குண்டு வெடிப்புகளின் பின்ன ணியில் இருக்கும் இந்து தீவிரவாதக் குழுவின் ஒரு பிரிவினர், அந்தக் குண்டு வெடிப்புகளில் ஒரு முக்கிய பங்காற்றி யவர் என்று கூறப்படும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ் குமார் பற்றி மிக ஆழ்ந்த சந்தேகம் கொண்டிருந்ததாகவும், அவரைக் கொலை செய்ய விரும்பியதாக வும் தெரிய வருகிறது. மெக்கா மசூதி, மாலே காவ்ன், ஆஜ்மீர், சம்ஜுதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டு வெடிப்புகளில் குமாருக் குத் தொடர்பிருந்த தாகக் கண்காணிக்கப் பட்டவர் ஆவார்.
லெப்டினன்ட் கர்னல் சிறீகாந்த் புரோ கித் மற்றும் இதரர்களி டம் முதலில் விசாரணை செய்யத் துவங்கிய போதே, இந்தக் குழுவிரி டையே ஆழ்ந்த கருத்து வேறுபாடும், பிள வும் இருப்பது தெரியவந்த தாக, வலதுசாரி தீவிர வாதச் செயல் களின் விசாரணை பற்றி நன்கு அறிந் துள்ள வட்டாரத் தினர் கூறினர். இந்தத் தொடர் குண்டு வெடிப் புகளில் முக்கியமாகப் பங்காற்றியவராக குமார் இருந்த போதும், இந்தக் குழுவில் இருந்த பல ராலும் ஏற்றுக்கொள் ளப் படாதவராக இருந் தாராம் என்று ஒரு விசாரணை அலுவலர் கூறினார்.
குமார் மற்றும் நேபாளைச் சேர்ந்த சுபேதார் சிங் இருவரும் ஆர்.எஸ்.எஸ். ஏஜென்ட் கள் என்றும், இந்தியா வில் கள்ள ரூபாய் நோட் டுகளைப் புழங்கவிடுவ தில் ஈடுபட்டிருந்தவர் கள் என்றும் இந்தக் குழுவின் முக்கிய உறுப் பினரான டில்லியைச் சேர்ந்த டாக்டர் ஆர்.பி.சிங் கூறியதாக புரோஹித் தன்னிடம் கூறியதாக அவர் கூறி னார். இதைப் பற்றி புரோஹித் உறுதியாக இருந்ததாக இக்குழுவின் செயல்பாடுகள் பற்றி விசாரணையில் தொடர் புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை அமைப் புகளிடம் கிடைத்துள்ள தகவல்களி லிருந்து, குமாரைக் கொல்ல ஒரு கைத்துப்பாக் கியை ஏற்பாடு செய்யுமாறு டாக்டர் சிங் புரோஹித்தைக் கேட்டுக் கொண்ட தாகத் தெரியவருகிற தாம். 2008 மாலேகாவ்ன் குண்டுவெடிப்புகள் தொடர்பாக கைது செய் யப்பட்ட ஃபரீதா பாத்தைச் சேர்ந்த சங்க ராச்சார்ய தயானந்த் பாண்டே புரோஹித்தை டாக்டர் சிங்குக்கு அறி முகப் படுத்தினாராம்.
குமாரைக் கொல்லு வதற்கான ஒரு சிறிய துப்பாக்கியை ஏற்பாடு செய்ததை புரோஹித் ஒப்புக் கொண்டாராம். துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகள் அருங் காட்சியகம் ஒன்றை பூனாவில் நடத்தும் ராகேஷ் தாவடேயை புரோஹித் தொடர்பு கொண்டு தேவையான துப்பாக்கியை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம். உள்ளூ ரில் செய்யப்பட்ட 9 மி.மீ. கைத்துப்பாக்கி ஒன்றையும் 9 சுற்று வெடிமருந்தையும் ஏற் பாடு செய்ய அவருக்கு ரூ 50,000 கொடுக்கப்பட் டதாம்.
இந்த கைத்துப்பாக் கியைத் தான் போபாலில் உள்ள அலோக் என்ப வரிடம் கொடுத்ததை யும், துப்பாக்கிக்கான வெடிமருந்தை அலோக் கிடம் சதுர்வேதி என்ப வர் ஃபரீதாபாத் சங்க ராச்சாரியா மடத்தில் வைத்து 2008 மே மாதத் தில் கொடுத்ததையும் புரோஹித் தனது விசா ரணை அதிகாரிகளிடம் தெரிவித்தாராம். மேலும் நான்கு சிறிய துப்பாக்கிகளும், அவற் றிற்கான வெடிமருந்தும் தேவை என்று சங்கராச் சாரியா கேட்டதாகவும் புரோஹித் தனது விசா ரணை அதிகாரியிடம் கூறினாராம்.
ஆஜ்மீர் வெடிகுண்டு வெடிப்பில் குமாருக்கு பங்கு இருப்பதாக சுவாமி அசீமானந்தா தெரிவித்ததை அடுத்து, அந்த வழக்கு தொடர் பாக குமாரை அழைத்து விசாரணை செய்ய ராஜஸ்தான் தீவிரவாதத் துக்கு எதிரான காவல் துறை கருதியிருந்ததாம். இந்தக் குழுவினரால் நிகழ்த்தப்பட்ட அனைத்து குண்டு வெடிப்புகளிலும் ஒரு முக்கிய பங் காற்றிய ஆர்.எஸ்.எஸ். பிரசாரக ரான சுனில் ஜோஷி, குமாரின் தூண் டுதலால் கொலை செய்யப்பட்ட தாக அசீ மானந்தா கூறி யதாகவும் விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ்.காரர்களிடம் தீவிரவாதம்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒப்புதல் வாக்குமூலம்
தீவிரவாத வன் முறைச் செயல்களில் ஈடுபட்டதாக ஆர். எஸ்.எஸ். அமைப்பின் மீது சந்தேக மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சங்கத்தின் சில உறுப் பினர்களிடம் தீவிரவா தத்துக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று இந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ஒப்புக் கொண்டுள்ளார். இத்தகைய உறுப்பி னர்கள் அமைப்பை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று கூறப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பல்வேறுபட்ட குண்டுவெடிப்பு சம்ப வங்களில் அரசினால் குற்றம் சாற்றப்பட்டுள்ள வர்களில் பெரும்பாலா னோரில், சிலர் தாங் களாகவே அமைப்பை விட்டு விலகிச் சென்று விட்டனர். தீவிரவாதம் பயன் தராது என்பதால், மற்றும் சிலரை அமைப்பை விட்டு வில கிச் செல்லக் கூறப்பட் டுள்ளது என்று மோகன் பகவத் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது கூறினார்.
காங்கிரஸ் தொடர்பாளர்
இதைப்பற்றிக் குறிப் பிட்டுப் பேசிய காங் கிரஸ் செய்தித் தொடர் பாளர் மனீஷ் திவாரி, எலிகள் கப்பலை விட்டு விட்டுச் செல்வது என்ற நிலை மாறி கப்பல் எலிகளை வெளியேற் றுகிறது என்று குறிப் பிட்டார்.
No comments:
Post a Comment