Monday, 22 August 2011
அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் நாடகம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது
இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்வி மேல் தோல்வி பெற்று இந்திய அணி சாதனை படைத்து வரும் வேளையில் இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்கள் அதாவது படித்த நடுத்தர வர்க்க கனவான்கள் இலண்டனில் நடந்த இளைஞர்களின் கலகத்தைக் கூட கண்டு கொள்ளாமல் இருந்த நேரம். இந்திய அணி தோல்வியால் டி.ஆர்.பி ரேட்டிங் சரிந்து தொலைக்காட்சிகளின் விளம்பரங்களும் குறைந்து போன நிலை. கிரிக்கெட் பால் போனால் என்ன இருக்கவே இருக்கிறது லோக் பால் எனும் பந்து. வந்தார் அண்ணா ஹாசாரே. அவர் அடிக்காத சிக்சரை அடித்ததாக நம்ப வைக்க ஊடகங்களும் அணிவகுத்தன. சின்னத்திரையில் கோக் குடித்தும், லேஸ் கடித்தும் காட்சிகளை மலிவான உணர்ச்சிகளாக உசுப்பேற்றிக் கொள்ளும் மேன்மக்களும் ஆட்டத்திற்கு தயாரானார்கள். இதோ ஆரம்பித்து விட்டது ஜோக்பால் வெர்ஷன் 2.0
அரசு கொண்டு வர இருக்கும் லோக்பாலுக்கு பல் இல்லை என்று அவர்கள் உருவாக்கியிருக்கும் ஜன லோக்பாலை வலியுறுத்தி அண்ணா அணியினர் காலவறையற்ற உண்ணாவிரதத்தை அறிவித்தார்கள். வழக்கமாக இந்தியாவில் குறிப்பாக பெருநகரங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் சமீபத்திய ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. தாராளமயமாக்கம் சூடுபிடித்த இந்த ஆண்டுகளில் மக்களின் அரசியல் நடவடிக்கைகளை இல்லாமல் செய்ய வேண்டுமென்றே இந்த நிபந்தனைகளை அரசும், நீதிமன்றங்களும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுத்தி வந்தன.
சென்னையில் கூட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்திய இடங்களில் எல்லாம் இப்போது நடத்தக் முடியாது. சுவர் எழுத்து எழுத தடை, சுவரொட்டி ஒட்ட தடை, முக்கிய சாலைகளில் கூட்டம் நடத்த, ஊர்வலம் நடத்தத் தடை என்பதெல்லாம் அரசியல் கட்சிகளில் இருக்கும் அனைவரும் அறிந்த விசயம். இந்தகைய அடக்குமுறைகளை ஒழுங்கு என்ற பெயரில் கொண்டு வந்த போதும், அப்படி கொண்டு வரவேண்டுமென்று குத்தாட்டம் போட்ட மேட்டுக்குடி வர்க்கம்தான் இப்போது அண்ணா போராட்டத்திற்கு தடை என்றதும் சீறி எழுகிறது.
டிராபிக் ராமசாமி முதல் இப்போது அண்ணாவின் போராட்டத்தில் மெழுகுவர்த்தியை ஏந்தும் முன்னாள் ஐ.ஏ.எஸ் பெரிசுகள் வரை இந்தகைய ‘ஒழுங்கைக்’ கொண்டு வரவேண்டுமென்று நீதிமன்றங்களில் வழக்கும் தொடுத்திருக்கிறார்கள். இந்து பத்திரிகையில் வாசகர் கடிதம் எழுதியும் பொங்கியிருக்கிறார்கள். அத்தகைய பெரிசு அம்பிகள்தான் இப்போது மீண்டும் எமர்ஜென்சி வந்து விட்டது என்று துள்ளுகிறார்கள்.
சமச்சீர் கல்விக்காக எமது தோழர்கள் தமிழகமெங்கும் போராட்டம் நடத்திய போது பல இடங்களில் போலிஸ் தடியடி, சிறை, வழக்குகளை சந்தித்துதான் நடத்தியிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறையில் சில, பல நாட்கள் இருந்திருக்கிறார்கள். அதில் பதினைந்து வயது மாணவனும் உண்டு.
இது இந்தியாவெங்கும் அன்றாடம் நடக்கும் நிகழ்வு. எந்தப் போராட்டமும் இத்தகைய அடக்குமுறைகளை சந்தித்தே நடைபெறுகிறது. அப்போதெல்லாம் ஜனநாயகம் காக்கப்படுவதாக ராகம் பாடும் அம்பிகள் இப்போது மட்டும் அதுவும் செல்லமாக அண்ணா போராட்டம் சீண்டப்படும் போது துள்ளுவது காணச்சகிக்க வில்லையே?
அண்ணாவின் வீரகாவியமாக சித்தரிக்கப்படும் அந்த காலவறையற்ற உண்ணாவிரதம் நடத்துவதற்கு டெல்லி காவல்துறை விதித்த 22 நிபந்தனைகளில் வெறும் ஆறு மட்டும் அண்ணா அணியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 5000 பேர்களுக்கு மேல் கூடக்கூடாது, மூன்று நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தக்கூடாது என்ற அந்த நிபந்தனைகளை டெல்லி போலீசு புதிதாக ஒன்றும் உருவாக்கவில்லை. இவையெல்லாம் தில்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உருவாக்கியிருக்கும் வழிகாட்டுதல்கள்தான். அதன் படிதான் நிபந்தனைகளை விதித்திருப்பதாக டெல்லி போலீசு சத்தியமடிக்காத குறையாக தெரிவித்திருக்கிறது.
இத்தகைய நிபந்தனைகள் மட்டுமல்ல இன்னும் பல்வேறு நிபந்தனைகளெல்லாம் இந்தியாவெங்கும் அன்றாடம் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. காஷ்மீர், வடகிழக்கு போன்ற போராட்ட மாநிலங்களில் இது இன்னும் காட்டு தர்பாராக இருக்கும். எனில் இத்தகைய நீதிமன்ற, அரசு நிபந்தனைகள், மக்களின் போராடும் உரிமையை ரத்து செய்கிறது, இவற்றை இந்தியாவெங்கும் ரத்து செய்ய வேண்டும் என்று அண்ணா அம்பிகள் அணி கோரவில்லை. சொல்லப்போனால் அத்தகைய நிபந்தனைகள் இன்னும் அதிகம் வேண்டுமென்பதுதான் அண்ணாவின் பின் இருக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தின் நிலை.
அண்ணாவிற்காக சென்னையில் சீன் போடும் அருணா சாய்ராம், அனிதா ராம், சுவர்ணமால்யா போன்ற கருநாடக, பரதநாட்டிய தாரகைகளிடம் அண்ணா சாலையில் தொழிலார்களின் ஊர்வலங்களை தடை செய்யலாமா என்று கேட்டுப் பாருங்கள்; கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் என்று ஒரே ஸ்வரத்தில் பாடுவார்கள், ஆடுவார்கள்! ஆனால் அவர்களது கோரிக்கைதான் ஏற்கனவே அமலில் இருக்கிறது என்பதால் இது ஒன்றும் பிரச்சினை அல்ல.
ஐரோம் ஷர்மிளா காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்கும் போது போலீசு வலுக்கட்டாயமாக அவரை தூக்கிச் சென்று மருத்துவ மனையில் வைத்து உணவையும், மருந்தையும் வலுக்கட்டாயமாக புகட்டிவிடும். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் அண்ணாவின் போராட்டத்திற்கு மட்டும் போலிசு பவ்யமாக நிபந்தனைகளை விதிக்கிறது. தாள் பணிந்து பேசுகிறது. அதை அண்ணா ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்ன போது பவ்யமாக கைது செய்கிறது. மாஜிஸ்ரேட் கூட அண்ணாவின் இடத்திற்கு வந்து பவ்யமாக விசாரிக்கிறார். பின்னர் நீதிமன்றக் காவல் என்றதும் சிறையில் உண்ணாவிரதத்தை நடத்துகிறார். இரவே விடுதலை என்றதும் சிறையை விட்டு அகல மறுக்கிறார்.
இதுவே மற்றவர்களென்றால் இப்படி எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. போராட்டங்களுக்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்படும் எவரும் அன்றிரவே விடுதலை செய்யப்பட்டதாக சரித்திரம் இல்லை. அப்படி விடுதலை செய்யப்பட்டாலும் யாரும் சிறையிலேயே தங்குவேன் என்று அடம்பிடிக்க முடியாது. குண்டு கட்டாக இழுத்து வந்து வெளியே தூக்கி எறிவார்கள். ஆக அண்ணா ஹசாரேவுக்காக போலீசு, நீதிமன்றம், சிறை எல்லாம் அடிபணிந்து சேவகம் செய்கிறது. இந்த இலட்சணத்தில் இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று அண்ணா அறிவித்திருப்பதை என்ன சொல்ல? முருகா, முருகா என்று வயிற்றிலும் வாயிலும் அடித்து அழவேண்டியதுதான்.
அரசு கொண்டு வர இருக்கும் லோக்பால் மசோதா தற்போது பாராளுமன்ற நிலைக்குழு முன் இருக்கிறது. இத்தகைய முறைகளில் பாராளுமன்றம்தான் இதை நிறைவேற்ற வேண்டும், மாறாக பாராளுமன்றத்திற்கு வெளியே சிலர் டெண்டு அடித்து போராட்டம் நடத்தி கொண்டு வருவது பாராளுமன்ற ஜனநாயகத்தை மறுப்பதாகும் என்று பிரதமர் மன்மோகன் உட்பட பல காங் அரசு ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
பாராளுமன்றத்திற்கு தெரியாமல் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கைநாட்டு இட்டது முதலான இட்டதுகளில் இருந்தே பாராளுமன்றத்திற்கு இறையாண்மையோ, புனிதமோ, உரிமையோ ஒரு எழவும் கிடையாது என்பது ஊரறிந்த விசயம். ஆனால் இதையெல்லாம் அண்ண அணி கூறவில்லை. நாங்கள்தான் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். ஆக பாராளுமன்றத்தின் பல் எப்போதோ பிடுங்கப்பட்டு விட்டது என்பதும், இந்திய அரசும் இப்போது அமெரிக்காவின் அடிமையாகி விட்ட நிலையில் அது குறித்தெல்லாம் அண்ணா ஹசாரே அணி கவலைப்படவில்லை. அவர்கள் கவலை எல்லாம் அந்த லோக்பாலை தூக்கிவிட்டு இவர்களது ஜன லோக்பாலை கொண்டு வரவேண்டும் என்பதுதான்.
அமைப்பு முறை என்ற முறையில் இந்திய அரசு அமல்படுத்தி வரும் தனியார் மயம்தான்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment