சென்னை: வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தனியாக நின்றுக்கொண்டிருந்த கார் ஒன்றில் சோதனை செய்தபோது அதில் காதலனுடன் இருந்த இரண்டு பள்ளி மாணவிகள் காவல்துறையிடம் பிடிபட்டனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காவல்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது கடற்கரை ஓரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. சாலைகளில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்த பெண் காவல் அதிகாரிக்கு தனியாக நிற்கும் கார் மீது சந்தேகம் வந்து கார் அருகே சென்றார். காருக்குள் உருவங்கள் தெரிந்தன. சந்தேக உறுதியான நிலையில் காரின் கதவை திறந்து பார்த்தபோது காரின் முன் இருக்கையில் ஒரு ஜோடியும், பின் இருக்கையில் மற்றொரு ஜோடியும் இருந்தது. அவர்கள் காதல் ஜோடிகள் என்று தெரியவந்தது.
இரு ஜோடிகளும் அரை, குறை ஆடைகளில் இருந்தனர். விசாரணையில், இரு பெண்களுமே பிளஸ் 2 மாணவிகள். ஆண்கள் இருவரும் பட்டதாரி வாலிபர்கள். இதனால் மாணவிகளை எச்சரித்த காவல்துறையினர் உடனடியாக காவல்துறை வாகனத்தில் அவர்கள் வசிக்கும் பகுதி வரை அழைத்து சென்று, இனிமேல் இதுபோன்ற காரில் சுற்றக்கூடாது என்றும் மீறினால் பெற்றோர்களுக்கு த்ரிவிக்கப்படும் என்றும் எச்சரித்து அனுப்பினர்.
அந்த பள்ளி மாணவிகளுக்கு வயது 17 கூட ஆகவில்லை. ஆண்களில் ஒருவர் கல்லூரியில் படிக்கிறார். மற்றொருவர் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறார் என்று தெரியவந்தது. அவர்கள் காதல் என்ற போர்வையில் இதுபோன்று மாணவிகளிடம் தவறாக நடப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் இருவரையும் கடும் எச்சரிக்கைக்கு பின்னர் பிணையில் விடுவித்தனர்.
No comments:
Post a Comment